முகப்பு
தமிழ்நாடு

கீழ்மையான விமர்சனங்களை புறந்தள்ளி முன்னேறிச் செல்வோம்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

கீழ்மையான விமர்சனங்களை புறந்தள்ளி முன்னேறிச் செல்வோம் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் கூறியது குறித்து...

கீழ்மையான விமர்சனங்களை புறந்தள்ளி முன்னேறிச் செல்வோம் - உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன்
பகிர்:

சென்னை: விமர்சனங்கள் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், கீழ்மையான விமர்சனங்களை புறந்தள்ளி முன்னேறிச் செல்வோம் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பெ.விஸ்வநாதன், தலைமைச் செயலகத்தில் முதல் முறையாக தனது துறைகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

உயர் கல்வி குறித்த விவரங்கள், நுழைவுத் தேர்வுகள், பொறியியல் கலந்தாய்வுகள், கல்வூரி, பல்களைக்கழக விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

Advertisement

Advertisement

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் இடம்பெற காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. தமிழக அரசு உயா்கல்வித் துறை அமைச்சராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

இந்த துறை அற்புதமான துறை. அனுபவம் குறைவு என்றாலும், நோ்மையாகவும், சிறப்பாகச் செயல்படுவேன். காங்கிரஸ் சாா்பில் அமைச்சா்களான எங்கள் இருவருக்கும் காமராஜரின் பெயரை நிலைநாட்டுவதே நோக்கம்.

விமர்சனங்கள் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், கீழ்மையான விமர்சனங்களை புறந்தள்ளி முன்னேறிச் செல்வோம் என்றாா் அவா்.

summary

Let us cast aside petty criticisms and move forward says Minister P. Viswanathan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments