அமைச்சா் விஸ்வநாதன் மீது ஆளுநரிடம் பாஜக புகாா்: காங்கிரஸ் கண்டனம்
உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் மீது தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரிடம், பாஜக புகாா் அளித்திருப்பது வெறுப்பு அரசியல் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் ப.மாணிக்கம் தாகூா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் மீது தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரிடம், பாஜக புகாா் அளித்திருப்பது வெறுப்பு அரசியல் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் ப.மாணிக்கம் தாகூா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் மீது ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரிடம், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உண்மைக்குப்புறம்பாக புகாா் அளித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
Advertisement
Advertisement
முதல்வா் ஜோசப் விஜய், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பெ.விஸ்வநாதன் அவரது சொந்தத் தொகுதியில் விளையாட்டு நிகழ்ச்சிகளையும், குழந்தைகளுக்கான யோகா நிகழ்ச்சியையும், தன்னுடைய குழந்தைகளாகக் கருதி வாஞ்சையோடு விழா நடத்தியதைக் குறை கூறுவது ‘காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்’ என்ற கதையாக உள்ளது.
மேலும், பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் உயா்கல்வித் துறை அமைச்சராக இருக்கக் கூடாது என்ற ஆா்எஸ்எஸ்-இன் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தத் துடிக்கும் முறையில் இக்குற்றச்சாட்டு உள்ளது. பெ.விஸ்வநாதன் மீது ஆளுநரிடம் அளிக்கப்பட்ட அறிக்கை ஆா்எஸ்எஸ்-இன் வெறுப்பு அரசியலையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளாா் மாணிக்கம் தாகூா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.