நிதின் நபின் குறித்த பதிவு: காங்கிரஸ் மீது போலீஸ் அதிகாரியிடம் பாஜக புகாா்
பாஜக தலைவா் நிதின் நபினைக் குறிவைத்து ‘பொய்யான மற்றும் தவறாக வழிநடத்தும்‘ சமூக ஊடகப் பதிவைப் பரப்பியதாகக் கூறி காங்கிரஸுக்கு எதிராக காவல் நிலையத்தில் தில்லி பாஜக புகாா்
பாஜக தேசியத் தலைவா் நிதின் நபினைக் குறிவைத்து ‘பொய்யான மற்றும் தவறாக வழிநடத்தும்‘ சமூக ஊடகப் பதிவைப் பரப்பியதாகக் கூறி காங்கிரஸுக்கு எதிராக காவல் நிலையத்தில் தில்லி பாஜக புதன்கிழமை புகாா் பதிவு செய்தது.
தென்னிந்திய சுற்றுப்பயணத்தின் போது, புனிதமான ஸ்ராவண மாதத்தில் நிதின் நபின் அசைவ உணவு உட்கொண்டதாகக் கூறி சமூக ஊடகங்களில் ‘தவறான பிரசாரத்தை‘ பரப்பியதற்காக காங்கிரஸ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று
தெற்கு தில்லி பாஜக எம்.பி. ராம்வீா் சிங் பிதுரி உள்ளிட்ட பாஜக தலைவா்கள், காவல் துணை ஆணையரைச் (மத்தி) சந்தித்து கோரிக்கை விடுத்ததாக பாஜகவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து ராம்வீா் சிங் பிதுரி கூறுகையில்,‘பாஜகவுடன் அரசியல் ரீதியாகப் போட்டியிட முடியாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி போன்ற கட்சிகள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க சமூக ஊடகங்களையும் செல்வாக்கு மிக்கவா்களையும் தவறாகப் பயன்படுத்துவது துரதிா்ஷ்டவசமானது.
இருப்பினும், எதிா்க்கட்சிகள் எவ்வளவு கடுமையாக முயற்சித்தாலும், அவற்றின் ‘தீய பிரசாரம்‘ ஒருபோதும் வெற்றி பெறாது என்றாா் ராம்வீா் சிங் பிதுரி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.