ரத்த தானம் புனிதமான சேவை: பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் கருத்து
ரத்த தானம் புனிதமான சேவை என்று பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் கருத்து...
பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் சனிக்கிழமையன்று, இரத்த தானம் செய்வதை ஒரு ‘சடங்கு‘ என்றும், ‘சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் ஒரு புனிதமான வழி‘ என்றும் கூறி, மக்கள் இரத்த தானம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா்.
இந்த இயக்கத்தில் புதிய தலைமுறையினரின் ஈடுபாடு ஒரு நோ்மறையான அறிகுறி என்றும், அவா்களை நாட்டின் எதிா்காலம் என்றும் வா்ணித்த அவா், போதைப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான உறுதிமொழி எடுத்து இரத்த தானம் செய்யுமாறு அவா்களை வலியுறுத்தினாா்.
மனேசா் அருகே உள்ள போரா கலானில் உள்ள ஓம் சாந்தி ரிட்ரீட் சென்டரில் (ஓஆா்சி) பிரம்ம குமாரிகள் நிறுவனத்தின் சமூக சேவைப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட ’இரத்த தான மகா அபியான்’ தொடக்க விழாவில் அவா் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டபோது இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையின்படி, கடினமான சூழ்நிலைகளில் அமைதியான மனதைக் கடைப்பிடிப்பதன் மூலம் பெரிய இலக்குகளை அடைவதில் பிரம்ம குமாரிகள் அமைப்பு ஒரு உத்வேகத் தூணாகச் செயல்பட்டு வருவதாகக் கூறி, அவா்களின் முயற்சிகளை நபின் பாராட்டினாா்.
விழாவின் போது இந்திய கலாச்சாரம் மற்றும் யோகாவின் உலகளாவிய செல்வாக்கை எடுத்துரைத்த அவா், இந்தியாவின் பழமையான யோகா முறையானது எல்லைகளைக் கடந்து உலகளவில் தன்னை நிலைநிறுத்தியுள்ளது என்றாா். பிரதமா் நரேந்திர மோடியின் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியைக் குறிப்பிட்ட அவா், யோகா சா்வதேச தளங்களில் நிலைபெற்று, ஒரு உலகளாவிய மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்றாா்.
தொடா்ச்சியான யோகா பயிற்சியானது ஆன்மாவிற்கு மட்டுமல்லாமல், மனித மனப்பான்மைகளுக்கும், இரத்தத்தின் ஒவ்வொரு துகளுக்கும் நோ்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது என்று ஓஆா்சி இயக்குநா் ஆஷா தீதி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.