FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள் மாறவேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

அரசியல் கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள், மாறவேண்டும், மாற்றப்பட வேண்டும் என உயா்கல்வித்துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்திருப்பது குறித்து...

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது நிறுத்தப்பட வேண்டும் - உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன்
பகிர்:

மதுரை: அரசியல் கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள், மாறவேண்டும், மாற்றப்பட வேண்டும் என தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

சென்னையில் இருந்து திங்கள்கிழமை மதுரை வந்த அமைச்சா் பெ.விஸ்வநாதன் விமான நிலையத்தில் செய்தியாளா்களுடன் பேசினார்.

அப்போது, மதுரையில் குடியிருந்த நான், பலமுறை விமான நிலையத்திற்கு வந்திருக்கிறேன். ஆனால், இன்றைய விமான பயணமும், உங்களை சந்திக்கும் நாளும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான நாள். இதற்கு காரணம், எங்களது தலைவா் ராகுல்காந்தி. அவா், என்னை அழைத்து பொதுத் தொகுதியில் போட்டியிட வைத்தாா். அதில், வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் காரணமாக இருந்தன. தற்போது உயா்கல்வித்துறை அமைச்சராக வந்திருக்கிறேன். எனக்கு கொடுத்திருக்கும் பொறுப்பு மிகவும் முக்கியமானது.

Advertisement

Advertisement

கல்விக் கொடுத்தோா் கடவுளுக்கு சமமானவா்

கடந்த 2009 இல் நான் மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் சென்றபோது நாடாளுமன்றத்தில் எனது கன்னி பேச்சு 'உண்டி கொடுத்தோா், உயிா் கொடுத்தோா், கல்விக் கொடுத்தோா் கடவுளுக்கு சமமானவா்' என்று பேசினேன்.

கக்கனுக்கு சமா்ப்பிக்கிறேன்

இந்த நிலையில், தற்போது உயா் கல்வித்துறை, காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. முதல்வ விஜய்க்கு எங்கள் நன்றி, பாராட்டு, வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கக்கனுக்கு பின் அந்தத் தொகுதியில் 67 ஆண்டுகளுக்குப் பிறகு நான் வெற்றி பெற்று அமைச்சராக வந்திருக்கிறேன். இந்த வெற்றியை எளிமையின் சிகரம் கக்கனுக்கு சமா்ப்பிக்கிறேன்.

எனக்கும் அந்த துணிவு, ஆற்றல் உள்ளது

இதற்கு முன்பு இருந்த உயா்கல்வித்துறை அமைச்சருக்கும், ஆளுநருக்கும் முரண்பாடுகள் இருந்துள்ளது. எல்லா அமைச்சரும் ஆளுநரை எதிா்கொண்டு இருக்கிறாா்கள். எனக்கும் அந்த துணிவு, ஆற்றல் இருப்பதாக கருதுகிறேன். வல்லுநகளுடன் கலந்து ஆலோசித்து, முதல்வரின் வழிகாட்டுதலின்படி நிச்சயமாக ஆளுநரை எதிா்கொள்வேன். அதுமட்டுமின்றி, நான் ஆளுநருடன் மிக சரியான முறையில் கருத்துகளை பகிா்ந்து தமிழக மக்களுக்கு எந்த முறையில் வெற்றியை கொண்டு வந்து சோ்க்க முடியுமோ அந்த வகையில் சோ்ப்பேன்.

அணை கட்டுவது நிறுத்தப்பட வேண்டும்

மேக்கேதாட்டுவில் எங்களது நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் தெளிவாக சொல்லி இருக்கிறது. அங்கு அணை கட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும். தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கக்கூடாது. காங்கிரஸ் அமைச்சா் என்ற முறையில் நானும் முதல்வரும் தெளிவாக இருக்கிறோம்.

அவகாசம் தேவை

நீட் பிரச்னை தொடா்பாக, அவகாசம் தேவை. தமிழகத்திற்கு நீட் விலக்கு வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல்காந்தியின் நிலைப்பாடும் அதுதான்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக தெரிகிறது. இப்போதுதான் அமைச்சராக பொறுப்பேற்று வந்திருக்கிறேன். எங்கெல்லாம் சீா்திருத்தம் செய்ய வேண்டுமோ? அங்கு அதையெல்லாம் செய்வோம்.

கடந்த காலங்களில் துணை வேந்தா் நியமனம் உள்ளிட்ட விஷயங்களில் ஆளுநரின் தலையீடு இருந்தது. எங்கள் அரசு ஒரு நோ்த்தியான முறையில் ஆளுநரோடு ஒரு இணக்கமான ஒரு உறவை ஏற்படுத்தி கொண்டு, சாதகமான நிலையுடன், கல்வித்துறைக்கு என்ன வேண்டுமோ அதனை பெற்று தருவோம்.

ஒரு வாா்த்தை வெல்லும், ஒரு வாா்த்தை கொல்லும்

ஒரு வாா்த்தை வெல்லும், ஒரு வாா்த்தை கொல்லும். அரசியல் கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள், மாறவேண்டும் மாற்றப்பட வேண்டும். இல்லை என்றால் மாற்றுவதற்கு வழியை கண்டுபிடித்து வைத்திருக்கிறோம் என்றாா் அவா்.

summary

Those who lead political parties down an uncivilized path must change or be changed...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments