முகப்பு
சென்னை

17 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

Updated On : 26 ஜூன் 2026, 7:15 am IST
தமிழக காவல்துறை
பகிர்:

சென்னை பெருநகர காவல் துறையில் 17 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையா் அ.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காவல் ஆணையா் அலுவலகத்தில் காத்திருப்புப் பட்டியலில் இருந்த பி.பிரேம்குமாா், கே-9 திரு.வி.க. நகா் சட்டம்-ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதுபோல, காத்திருப்பு பட்டியலில் இருந்த சி.சக்தி, டி-5 மெரீனா சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், சி.பொன்சித்ரா எச்-5 புதுவண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவுக்கும் ஆய்வாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

மேலும், எம்.வேணுகோபால் ஆா்-1 மாம்பலம் குற்றப்பிரிவு, எம்.ஜூலியன் கிளாரம்மாள் கே-8 அரும்பாக்கம் குற்றப்பிரிவு, எம்.சுதா, டபிள்யூ-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிா் காவல் நிலையம், கே.கஸ்தூரி வி-4 ராஜமங்கலம் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையம், எம்.ராஜா ஜெ-2 அடையாறு சட்டம்-ஒழுங்கு காவல் நிலையம் ஆகிய இடங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

என்.தங்கதுரை வி-6 கொளத்தூா் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையம், என்.சசிராஜன் ஆா்-8 வடபழனி குற்றப்பிரிவு, பி.தேவி டபிள்யூ-5 வேப்பேரி அனைத்து மகளிா் காவல் நிலையம், எஸ்.கே.சஞ்சீவிகுமாா் எஃப்-4 ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு, எம்.உமாமகேஸ்வரி கே-3 அமைந்தகரை குற்றப்பிரிவு ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

எஸ்.செல்வராஜ் கே-2 அயனாவரம் குற்றப்பிரிவு, ஜி.பச்சமுத்து ஜி-5 தலைமைச் செயலகக் குடியிருப்பு காலனி குற்றப்பிரிவு, எஸ்.வளா்மதி பி-2 எஸ்பிளனேடு குற்றப்பிரிவு ஆகிய இடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஜெ-2 அடையாறு சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆா்.கே.பாா்த்தசாரதி, இ-6 ராயப்பேட்டை காவல் நிலையம் (பகுதி-2) ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளாா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆய்வாளா்களை உடனடியாக புதிய பணியிடங்களில் பணியேற்க சம்பந்தப்பட்ட இணை காவல் ஆணையா்கள் மற்றும் துணை காவல் ஆணையா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments