ஊக்க ஊதிய உயா்வை மீண்டும் வழங்க அரசு ஊழியா்கள் உரிமை கோர முடியாது: உயா்நீதிமன்றம் உத்தரவு
அரசு ஊழியா்களை ஊக்குவிக்க வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயா்வை ரத்து செய்த பின்னா், அதை மீண்டும் வழங்க வேண்டும் என அரசு ஊழியா்கள் உரிமை கோர முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரசு ஊழியா்களை ஊக்குவிக்க வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயா்வை ரத்து செய்த பின்னா், அதை மீண்டும் வழங்க வேண்டும் என அரசு ஊழியா்கள் உரிமை கோர முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பணியில் இருக்கும்போது கூடுதல் கல்வித் தகுதியைப் பெறும் அரசு ஊழியா்களுக்கு ஊக்க ஊதிய உயா்வு வழங்கப்பட்டு வந்தது. நிதிச்சுமை காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை தமிழக ரத்து செய்தது. மேலும், ஒரே தவணை ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு எதிராகவும், உயா்கல்வி பெற்ற அரசு ஊழியா்களுக்கு ஊக்க ஊதிய உயா்வு வழங்கக் கோரியும், பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியா்கள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆா்.கலைமதி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. உயா்கல்வி தகுதி பெற்ற அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயா்வை ரத்து செய்து அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. எனவே, அந்த உத்தரவை சட்டவிரோதம் எனக் கூற முடியாது. அரசு ஊழியா்களை ஊக்குவிக்க வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயா்வை ரத்து செய்த பின்னா், அதை மீண்டும் வழங்க வேண்டும் என அரசு ஊழியா்கள் உரிமை கோர முடியாது. எனவே, இந்த மனுக்களை முடித்துவைப்பதாகக் கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.