FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மாநில உரிமை, பெண்கள், குழந்தைகள் நலனை முன்னிறுத்தி இந்த அரசு செயல்படும்: ஆளுநர் உரை

மாநில உரிமை, பெண்கள், குழந்தைகள் நலனை முன்னிறுத்தி இந்த அரசு செயல்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் உரை குறித்து....

Updated On : 18 ஜூன் 2026, 10:34 am IST
சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரை - டிஎன்எஸ்
பகிர்:

மாநில உரிமை, பெண்கள், குழந்தைகள் நலனை முன்னிறுத்தி இந்த அரசு செயல்படும் என சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தெரிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தவெக அரசின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) தொடங்கியது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநா் ஆர்.வி. ஆா்லேகர் உரையாற்றி வருகிறார்.

அவர் பேசுகையில், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா பெயரை சுட்டிக் காட்டி உரையாற்றினார்.

Advertisement

Advertisement

கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில் மக்களின் பெரும் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது தவெக. விஜய்யால் மட்டுமே தமிழகத்தை ஆள முடியும் என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்; சட்டப்பேரவையில் மக்களுக்காக விவாதிப்பீர்கள் என நம்புகிறேன்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு

1967-இல் அண்ணா, 1977-இல் எம்ஜிஆர், அதற்கு பின் 2026 இல் தமிழக அரசியலில் புதிய வரலாற்று புரட்சி நடந்துள்ளது. 74 ஆண்டுகால வரலாற்று தமிழக அரசியலில் தவெக ஆட்சியின் முதல்வர் ஜோசப் விஜய் தான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கியுள்ளார்.

பல தடைகளை தாண்டி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக சாதனை படைத்துள்ளது. விசில் புரட்சியின் மூலம் இமயமலை அளிவிற்கான வெற்றியை பதிவு செய்துள்ளார் முதல்வர் விஜய்.

மாநில உரிமை, பெண்கள், குழந்தைகள் நலனுக்கு முன்னுரிமை

மாநில உரிமை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனை முன்னிறுத்தி இந்த அரசு செயல்படும் என பேசினார்.

முழுமையாக வாசிக்கப்பட்ட ஆளுநர் உரை

2022 ஆம் ஆண்டுக்கு பிறகு 2026 இல் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை முழுமையாக வாசிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக தேசிய கீதம் வாசிப்பது உள்ளிட்ட காரணங்களால் இதற்கு முன்பிருந்த ஆளுநர் உரையை முழுமையாக படிக்காமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

கருப்பு பேட்ஜ்

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்பதை சுட்டிக் காட்டும் வகையில் சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுக உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். அதில் "வாயை திறங்க சிஎம்" என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

எடப்பாடிக்கு 5 ஆவது இருக்கை

தற்போதைய தவெக ஆட்சியில் எதிர்க்கட்சி அந்தஸ்தை திமுக பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு 5 ஆவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

summary

Regarding the Governor's address in the Legislative Assembly, the government will function by prioritizing state rights and the welfare of women and children...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments