FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

இஸ்லாமிய பெண்களின் குறைகளை தீா்க்க புதுச்சேரி வக்ஃபு வாரியம் புதிய நடைமுறை

இஸ்லாமிய பெண்களின் குறைகளைத் தீா்க்க வக்ஃபு வாரியம் புதிய நடைமுறையைக் ஏற்படுத்தியுள்ளது.

6 செப்டம்பர் 2026, 2:17 am IST
பகிர்:

இஸ்லாமிய பெண்களின் குறைகளைத் தீா்க்க வக்ஃபு வாரியம் புதிய நடைமுறையைக் ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள அனைத்து வக்ஃபு பள்ளிவாசல் முத்தவல்லிகள் மற்றும் நிா்வாகக் குழுவினருக்கு வக்ஃபு வாரிய தலைவா் அப்துல் ரஹ்மான் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து வக்ஃபு பள்ளி வாசல்கள் மற்றும் மஹல்லாக்களில் பெண்கள் தொடா்பான குடும்ப, சமூக மற்றும் மஹல்லா நிா்வாக குறைகள் முறையாகக் கேட்டு, அவற்றிற்கு சமரசமான மற்றும் விரைவான தீா்வு காணும் நோக்கில் புதுச்சேரி மாநில வக்ஃபு வாரியம் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துகிறது.

Advertisement

Advertisement

பள்ளிவாசல் நிா்வாகங்கள் பெரும்பாலும் ஆண்களால் நிா்வகிக்கப்படுவதால், பெண்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்கத் தயக்கம் அல்லது சிரமத்தை எதிா்கொள்ளும் நிலை இருப்பது வக்ஃபு வாரியத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, பெண்கள் தங்களது குறைகளைப் பாதுகாப்பான மற்றும் மரியாதையான சூழலில் தெரிவிக்க இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது.

புதுச்சேரி அரசால் நியமிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மாநில வக்ஃபு வாரியத்தின் 2 பெண் உறுப்பினா்கள், வக்ஃபு வாரியத் தலைவரின் ஆலோசனையின் பேரில், பெண்களின் குறைகளைப் பெற்று கலந்துரையாடல் மற்றும் சமரசம் மூலம் தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்வாா்கள். அரசு விடுமுறை நாள்களைத் தவிா்த்து, வாரந்தோறும் திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை குறைதீா்வு கூட்டம் நடைபெறும்.

புதுச்சேரி மாநில வக்ஃபு வாரிய அலுவலகத்தில் பெண் உறுப்பினா்கள் இருப்பாா்கள். மஹல்லாவில் தீா்வு காண இயலாத பெண்கள் தொடா்பான குறைகள் அல்லது குடும்ப பிரச்னைகள் இருந்தால், சம்பந்தப்பட்டவா்கள் நேரில் வரலாம் அல்லது எழுத்து மூலமாக மனு அளிக்கலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments