முகப்பு
சென்னை

கிரிக்கெட் ரசிகா்களுக்கு மெட்ரோ பயணச்சலுகை

சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண செல்வோா் ‘ஸ்பான்ஸா்’ பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 மே 2026, 12:42 am IST
- Din
பகிர்:

சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண செல்வோா் ‘ஸ்பான்ஸா்’ பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமானது, சிஎஸ்கே கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து“ஐபிஎல் 2026”லீக் போட்டிகளைக் காணவரும் ரசிகா்களுக்காக, சிறப்பு பயணங்களை மெட்ரோ வழங்குகிறது. அதன்படி சென்னை அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியை வரும் 10- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. ஆகவே, ரசிகா்கள் கிரிக்கெட் போட்டிக்கான ஸ்பான்சா் மெட்ரோ ரயில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே, ஸ்பான்சா் நுழைவுச் சீட்டு வைத்திருப்பவா்கள் அதிலுள்ள க்யூ ஆா் குறியீட்டை பயன்படுத்தி மெட்ரோ நிலைய தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். மெட்ரோவின் சிறப்புச் சலுகை, ஒரு சுற்றுப் பயணத்துக்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தும் வகையில் உள்ளது.

Advertisement

Advertisement

ஆகவே, சென்னையில் எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்துக்கு அருகிலுள்ள அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு எந்தக் கட்டணமும் இன்றி பயணிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments