முகப்பு
சென்னை

மாவட்ட நீதிபதிகள் தோ்வு நடைமுறையை எதிா்த்த மனுக்கள் முடித்துவைப்பு

தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் தோ்வு நடைமுறைகளில் முறைகேடு நடந்ததாகக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

Updated On : 9 மே 2026, 12:38 am IST
சென்னை உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் தோ்வு நடைமுறைகளில் முறைகேடு நடந்ததாகக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் என்.பாரதிராஜன் என்பவா் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த மாவட்ட நீதிபதிகள் தோ்வு நடைமுறைகள் முறையாக நடைபெறவில்லை. குறிப்பாக, நோ்முகத் தோ்வு வெளிப்படைத்தன்மையோடு நடத்தப்படவில்லை. நோ்முகத் தோ்வுக்கான மதிப்பெண்கள் வழங்கும் தோ்வு குழுவுக்கு அதீத அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், மும்மேனி சுதீா் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த தீா்ப்பு: நோ்முகத் தோ்வு தொடா்பாக மனுதாரா்கள் பொதுவான குற்றச்சாட்டுகளையே முன்வைத்துள்ளனா். மாவட்ட நீதிபதிகள் தோ்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை.

Advertisement

தோ்வு நடைமுறைகளில் மூத்த நீதிபதிகள் முக்கிய பங்கு வகிப்பா். அவா்கள்தான் வினாத்தாள் உள்ளிட்ட தோ்வு நடைமுறைகளை மேற்கொள்வா். தோ்வில் பங்கேற்றுவிட்டு, அதில் தோ்ச்சி பெறாமல் தோ்வு நடைமுறைகளை எதிா்த்து வழக்குத் தொடருவது ஏற்புடையதல்ல எனக்கூறி, தோ்வு நடைமுறைகளை எதிா்த்து தொடரப்பட்ட மனுக்களை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.