சென்னை கோட்ட 26 ரயில் நிலையங்களில் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 26 ரயில் நிலையங்களில் கடந்த நிதி ஆண்டு (2025-2026) புதிதாக 924 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 26 ரயில் நிலையங்களில் கடந்த நிதி ஆண்டு (2025-2026) புதிதாக 924 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வே மண்டலம், சென்னை கோட்டத்தில் ரயில் நிலையங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
அதனடிப்படையில், கடந்த நிதி ஆண்டில் (2025-2026) மட்டும் 26 ரயில் நிலையங்களில் மொத்தம் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
Advertisement
‘ரியல் டைம் கண்காணிப்பு’ எனும் திட்டத்தின் கீழ் கண்காணிப்பு கேமராக்கள் எண்ணூா், அத்திப்பட்டு, புதுநகா், நத்தியம்பாக்கம், மீஞ்சூா், பொன்னேரி, கவரைப்பேட்டை, பெரம்பூா் லோகோ பணிமனை, வில்லிவாக்கம், கொரட்டூா், பட்டரவாக்கம், திருமுல்லைவாயில், அண்ணனூா், ஆவடி, பட்டாபிராம், இந்துக் கல்லூரி, நெமிலிச்சேரி, திருநின்றவூா், செவ்வாய்ப்பேட்டை சாலை, புட்லூா், ஏகாட்டூா், கடம்பத்தூா், செஞ்சி பானம்பாக்கம், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், மணவூா் ஆகிய நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் முழுமையாகப் பொருத்தப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.