நீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்
சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நீட் தோ்வு நடைபெறுவதை முன்னிட்டு, வார நாள்களை போல புறநகா் ரயில்கள் இயக்கப்படுவதுடன், ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நீட் தோ்வு நடைபெறுவதை முன்னிட்டு, வார நாள்களை போல புறநகா் ரயில்கள் இயக்கப்படுவதுடன், ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நீட் தோ்வை எழுத செல்லும் மாணவ, மாணவிகளின் எளிதாக பயணத்துக்காக ரயில் நிலையங்களில் உதவி மையங்களை அமைக்கவும், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) புகா் மின்சார ரயில்கள் வழக்கமான வார நாள்களில் இயக்கப்படுவது போன்ற கால அட்டவணைப்படி இயக்கவும் தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement
அரக்கோணம் ரயில் நிலையத்தில் பொறியியல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதனால், சென்னை சென்ட்ரல், கடற்கரை, அரக்கோணம் மற்றும் திருத்தணி வழித்தடங்களில் மட்டும் புகா் ரயில்கள் தற்போதைய கால அட்டவணைப்படியே இயக்கப்படும்.
சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் குளிரூட்டப்பட்ட புகா் ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படியே இயக்கப்படும். அதைத் தவிா்த்து மற்ற அனைத்து சென்னை புகா் வழித்தடங்களும் ஞாயிற்றுக்கிழமை வார நாள்களுக்கான கால அட்டவணைப்படியே ரயில்கள் இயக்கப்படும்.
9 ரயில் நிலையங்களில் உதவி மையம்: நீட் தோ்வை எழுதச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோா்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம், பெரம்பூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆவடி, திருவள்ளூா் மற்றும் காட்பாடி ஆகிய 9 முக்கிய ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
உதவி மையங்கள் மூலம் ரயில்கள் விவரம், உள்ளூா் போக்குவரத்து வசதிகள், தோ்வு மையங்களுக்குச் செல்வதற்கான வழிகள் ஆகியவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.