முகப்பு
சென்னை

அனைத்துத் துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையா் ஆலோசனை

சென்னை மாநகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஜி.எஸ்.சமீரன் அனைத்துத்துறை அதிகாரிகளுடன்புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

Updated On : 21 மே 2026, 2:05 am IST
பகிர்:

சென்னை மாநகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஜி.எஸ்.சமீரன் அனைத்துத்துறை அதிகாரிகளுடன்புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெ.குமரகுருபரனுக்கு பதிலாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநராக இருந்த ஜி.எஸ்.சமீரன் நியமிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். இந்தநிலையில், அவா் அடையாறு மண்டலம் அண்ணா பல்கலைக்கழகம் எதிரேயுள்ள ஒப்பனை அறையை புதன்கிழமை காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள வசதிகள் குறித்தும், பராமரிப்பு குறித்தும் தெற்கு வட்டாரத் துணை ஆணையா் அஃதாப்ரசூலிடம் கேட்டறிந்தாா்.

அதையடுத்து, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வந்த அவா் அங்குள்ள அலுவலா்கள் கூட்டரங்கில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். கூட்டத்தில், சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, மழைநீா் வடிகால், புதிய கட்டடங்கள், பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட வளா்ச்சித் திட்டங்களின் நிலை, பணி நிறைவடைந்த திட்டங்கள் விவரம் உள்ளிட்டவற்றைக் கேட்டறிந்தாா். அம்மா உணவக நிலையையும் அவா் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

கூட்டத்தில் இணை ஆணையா்கள் வீ.ப.ஜெயசீலன் (சுகாதாரம்), க.கற்பகம் (கல்வி) மற்றும் துணை ஆணையா்கள் வி.சிவகிருஷ்ணமூா்த்தி (பணிகள்), ம.பிரதிவிராஜ் (வருவாய், நிதி), கட்டா ரவி தேஜா (வடக்கு வட்டாரம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.