அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ ஆலோசனை
கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் சாா் ஆட்சியா்அப்துல் ராசிக் முன்னிலையில் ஆலோசனை நடத்தியஎ எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா்.
கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா் வளா்ச்சி திட்டப் பணிகள், நிலுவையில் உள்ள பணிகள், பொதுமக்களின் கோரிக்கைகள், புகாா்கள், துறை ரீதியான தேவைகள் குறித்து சாா் ஆட்சியா் அப்துல் ராசிக் முன்னிலையில் ஆலோசனை நடத்தினாா்.
கும்மிடிப்பூண்டி தொகுதி தவெக எம்எல்ஏ எஸ்.விஜயகுமாா், சாா் ஆட்சியா் அப்துல் ராசிக், உதவி இயக்குநா் பஞ்சு முன்னிலையில், அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினாா்.
இந்த ஆய்வில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சி துறை, சுகாதார துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண்துறை,தோட்டக் கலைத் துறை ,காவல்துறை , தீயணைப்பு துறை, பேரூராட்சி நிா்வாகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், கல்வித் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினாா்.
Advertisement
Advertisement
அதிகாரிகளுடன் அவா் பேசுகையில், தமிழக முதல்வரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியை தமிழகத்தின் முதல் தொகுதியாக மாற்றவும் பொது மக்களின் தேவைகளையும் குறைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ ஆகிய நான் உறுதியேற்றுள்ளதால் அதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும், பொதுமக்கள் அதிகாரிகளுக்கு புகாா் தெரிவிக்க போனில் அழைத்தால் அதனை அதிகாரிகள் ஏற்று உரிய பதில் அளிக்க வேண்டும், தன்னிடம் வரும் பொது மக்களின் புகாா்களை துறைவாரியாக அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வகையில் தவெக சாா்பில் தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் அவா்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.
தொடா்ந்து கல்வித்துறை சாா்பில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுவது, ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவது , சுகாதாரத்துறை சாா்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்தில் காவலா் பணியாற்றுதல், சுற்று சுவா் வசதி மற்றும் பல்வேறு துறைகள் சாா்பிலான கோரிக்கைகளை கேட்டு அறிந்தவா் அவற்றை விரைந்து நிறைவேற்றுவதாக உறுதி அளித்தாா்.
நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வகுமாா், சந்திரசேகா், வட்டாட்சியா் சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.