காஞ்சிபுரம்

அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம்

DIN

அரசு மருத்துவர்களின் மேற்படிப்புக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை நீக்க வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் வியாழக்கிழமை பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை முன்பு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்புக்கான இடங்களில், முன்பு இருந்தது போலவே 50 சதவீத இட ஒதுக்கீட்டை இயற்ற வேண்டும், மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பு இடங்களில் ஒதுக்கீடு கிடையாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து மருத்துவர்களின் உரிமைகளைக் காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அரசு மருத்துவர்கள், வெளிநோயாளிகள் பிரிவில் இரண்டு மணி நேரம் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு!

கோபா அமெரிக்காவின் தீம் பாடல்!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

எங்கே செல்கிறார் சோபிதா?

SCROLL FOR NEXT