காஞ்சிபுரம்

பயிர்கள் காய்ந்ததால் விவசாயி தற்கொலை

DIN

மதுராந்தகம் அருகே நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் காய்ந்ததால் வேதனையடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
செய்யூர் வட்டம், அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (45). விவசாயியான இவர், தனது உறவினருக்குச் சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்தார். இந்நிலையில் வறட்சி காரணமாக, பயிர்கள் காய்ந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிலத்தைப் பார்வையிட்ட சந்திரசேகர் வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டுக்கு வந்த அவர், பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறந்த சந்திரசேகருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சூனாம்பேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT