பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் கார் மோதி சாவு
தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊருக்கு பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் மீது எதிர் திசையில் வந்த கார் மோதியது. இந்த விபத்தில் அவர்கள் உயிரிழந்தனர்.
தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊருக்கு பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் மீது எதிர் திசையில் வந்த கார் மோதியது. இந்த விபத்தில் அவர்கள் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த வி.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (25), அஜித்குமார் (23) ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் தனியார் தொழிற்சாலையில் எலெக்ட்ரிஷியனாக வேலை பார்த்து வந்தனர். சென்னையில் தங்கியிருந்த அவர்கள் தீபாவளிப் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக, சென்னையில் இருந்து திங்கள்கிழமை பைக்கில் புறப்பட்டனர்.
செங்கல்பட்டு வழியாக அத்திமானம் நெடுஞ்சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்திசையில் வந்த கார் திடீரென்று சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளைத் தாண்டி பைக்கில் வந்த சந்தோஷ்குமார், அஜித்குமார் ஆகியோர் மீது மோதியது. இதில், சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் வந்த நண்பர் அஜித்குமார் படுகாயமடைந்தார். அவரை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.
இவ்விபத்து குறித்து மதுராந்தகம் காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.