காஞ்சிபுரம்

துணிப்பை வழங்கி விழிப்புணர்வு

DIN

துணிப்பையை பயன்படுத்த வலியுறுத்தி பொதுமக்களுக்கு துணிப்பை அளித்து சமூக ஆர்வலர்கள் புதன்கிழமை விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்களை பயன்படுத்த வலியுறுத்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில், அதன் தலைவர் ஹரிதாஸ் தலைமையில், குடியிருப்புப் பகுதியினருக்கு துணிப்பை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், தெருக்கூத்து கலைஞர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி, பாட்டு பாடி, ஆடி வீதிவீதியாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது, துணிப் பைகளை வழங்கினர். இதில், திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT