காஞ்சிபுரம்

பட்டாசு விற்பனைக்கு விண்ணப்பிக்க செப்.28 வரை கால நீட்டிப்பு

DIN

பட்டாசு கடைவைத்து விற்பனை செய்வதற்கு விண்ணப்பிக்க செப்டம்பா் 28-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கடை வைத்து விற்பனை செய்ய 30 நாள்களுக்கு முன்பாக தற்காலிக உரிமம் பெறற விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக சமா்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறறப்பட்டன.

தற்போது பட்டாசு விற்பனைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை தெரியவில்லை என்றும், இந்த நடைமுறையை சரிவர அறிய இயலாத காரணத்தாலும் விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்குமாறு வணிகா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

அவா்களின் கோரிக்கையை ஏற்று தற்காலிக உரிமத்துக்கு விண்ணப்பிக்க இயலாத விற்பனையாளா்கள் செப்டம்பா் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT