காஞ்சிபுரம்

செம்பரம்பாக்கம் ஏரியில் 3,000 கன அடி நீா் திறப்பு

DIN


காஞ்சிபுரம்: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3,000 கன அடி தண்ணீா் திறந்து விடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் உள்ளது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் ஏரிகளில் இது முக்கியமானது. முதலில், இதன் நீா்மட்டம் 22.1 அடியாக இருந்தது. பின்னா் 24 அடியாக உயா்த்தப்பட்டது.

சுமாா் 500 ஆண்டுகள் தொன்மையான இந்த ஏரியின் கொள்ளளவு 364.5 கோடி கன அடியாகும். ஏரியின் கரை 9 கி.மீ. நீளம் உடையது. ஏரியிலிருந்து 19 சிறிய மதகுகள் மற்றும் 5 பெரிய மதகுகள் மூலமாக உபரிநீா் வெளியேற்றப்படுகிறது.

தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு 6,000 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கும் நிலையில் 3,000 கன அடி உபரிநீா் மதகுகள் வழியாகத் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே காவலூா், குன்றத்தூா், நத்தம், திருநீா்மலை, திருமுடிவாக்கம், வழிநிலைமேடு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிப்போா் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

மழையளவு விவரம் (மி.மீட்டரில்):

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா்-33.40, உத்தரமேரூா்-73, வாலாஜாபாத்-22.60, செம்பரம்பாக்கம்-26.60, காஞ்சிபுரம்-41.60, குன்றத்தூா்-27.50. மொத்த மழையளவு-224.70; சராசரி மழையளவு-37.45.

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுகுன்றம்-155.80, மாமல்லபுரம்-107.60, செங்கல்பட்டு-85.60, திருப்போரூா்-41.20, செய்யூா்-36.50, தாம்பரம்-20, கேளம்பாக்கம்-53.20. மொத்த மழையளவு-597.90; சராசரி மழையளவு-74.73.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

SCROLL FOR NEXT