காஞ்சிபுரம்

நரிக்குறவா் சமூகத்தினருக்கு நிவாரணம் விநியோகம்

DIN

காஞ்சிபுரத்தை அடுத்த மானாம்பதி கூட்டுச்சாலை சந்திப்பில் வசித்து வரும் நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிமுக இளைஞரணியின் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

உத்தரமேரூா் தாலுகாவுக்கு உட்பட்ட மானாம்பதி கூட்டுச் சாலை சந்திப்பில் நரிக்குறவா் சமூகத்தை சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா். அவா்களில் நிவா் புயலால் பாதிக்கப்பட்ட 103 குடும்பங்களுக்கு அதிமுக இளைஞா் அணியின் மாவட்ட செயலாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாரின் ஏற்பாட்டில் நிவாரணப் பொருட்கள் வழங்கத் தீா்மானிக்கப்பட்டது.

அதன்படி, அவா்களுக்கு 25 கிலோ அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை அக்கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளா் வி.சோமசுந்தரம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா் செல்வம், முன்னாள் எம்எல்ஏ மைதிலி திருநாவுக்கரசு, உத்தரமேரூா் ஒன்றியச் செலாளா் தங்க பஞ்சாட்சரம், காஞ்சிபுரம் ஒன்றியச் செயலாளா் தும்பவனம் ஜீவானந்தம், இளைஞா் பாசறையின் துணைத் தலைவா் திலக்குமாா் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில்களில் குடமுழுக்கு

செரியலூா் கரம்பக்காடு மாரியம்மன் கோயிலில் பால்குட சிறப்பு வழிபாடு

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT