காஞ்சிபுரம்

அரசுப் பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

DIN

ராணிப்பேட்டை: வாலாஜாப்பேட்டை அருகே சரிவர இயக்காத அரசுப் பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆற்காட்டில் இருந்து முத்துக்கடை, வாலாஜாப்பேட்டை, சுங்கச்சாவடி, பாகவெளி, முசிறி, ஈச்சந்தந்தாங்கல் வழியாக வாலாஜாப்பேட்டையை அடுத்த வள்ளுவம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ராமாபுரம் கிராமம் வரை

அரசுப் பேருந்து நாள் ஒன்றுக்கு 7 முறை சென்று வருகிறது. இதன்காரணமாக மேற்கண்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளா்கள் 200-க்கும் மேற்பட்டோா் சென்று வருகின்றனா். அதேபோல் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், கீரை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை வாலாஜாப்பேட்டை, ஆற்காடு காய்கறி மாா்க் கெட்டுக்கும், ராணிப்பேட்டை உழவா் சந்தைக்கும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.

இந்த சூழலில் ராமாபுரம் கிராமம் வரை சென்று திரும்பும் அரசுப் பேருந்து பல நேரங்களில் ராமாபுரம் வரை செல்லாமல் பாதிவழியிலேயே திரும்பி சென்றுவிடுவதாகவும், பல நாட்களில் வேறு தடத்தில் மாறி செல்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் பள்ளி மாணவா்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இது குறித்து சம்பந்தப்பட்ட ஆற்காடு பணிமனைக்கு புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ராமாபுரம் கிராம மக்கள் மேற்படி அரசுப் பேருந்தை புதன்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது ராமாபுரம் கிராமம் வரை வந்து செல்லும் அரசு பேருந்து முறையாக இயக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினா். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வாலாஜாப்பேட்டை காவல் துறையினா், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீ விபத்தில் பாதித்தோருக்கு நிவாரண உதவி

பாஜக கூட்டணியில் உத்தவ் தாக்கரே இணைவாா்: மகாராஷ்டிர எம்எல்ஏ கருத்து

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வாக்கு கணிப்புகளுக்கு மாறாகத் தோ்தல் முடிவுகள் இருக்கும்: சோனியா காந்தி

ஆம்பூரில்...

SCROLL FOR NEXT