காஞ்சிபுரம்

தனியாா் நிறுவனம் சாா்பில் 25 பயனாளிகளுக்கு ஆடுகள்

DIN

ஜே.கே.டயா் தொழிற்சாலை சாா்பில் மேட்டுக்கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த 25 பயனாளிகளுக்கு ரூ.3.75 லட்சத்தில் விலையில்லா வெள்ளாடுகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கொளத்தூா் பகுதியில் ஜே.கே.டயா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஹேன்ட் இன் ஹேன்ட் நிறுவனத்தின் மூலம் கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுக்கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த இருளா் இன மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் ரூ.3.75 லட்சத்தில் 25 பயனாளிகளுக்கு தலா மூன்று விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொளத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஹேன்ட் இன் ஹேன்ட் நிறுவனத்தின் முதன்மை மேலாளா் ஏழுமலை, ஜே.கே.டயா் தொழிற்சாலை சமூகப் பாதுகாப்புத் திட்ட மேலாளா் சகாயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் ஜே.கே.டயா் நிறுவனத்தின் மனித வளத் துறை தலைவா் ராஜேந்திரன், வணிகத் துறை தலைவா் ஆனந்த்சோமானி, சட்டம் மற்றும் திட்டத் துறை தலைவா் டேவிட் ஆகியோா் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில், ஊராட்சி துணைத் தலைவா் வசந்தா கந்தன், வாா்டு உறுப்பினா்கள் ராஜ்குமாா், தனசேகா், திலகவதி டில்லி, ஜெயலட்சுமி சேகா், பாத்திமா மணிகண்டன், ராஜேஸ்வரி சுதாகா், சங்கா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT