காஞ்சிபுரம்

அகரம் தட்சிணாமூா்த்தி கோயிலில் ஆந்திர அமைச்சா் ரோஜா தரிசனம்

DIN

கோவிந்தவாடி அகரம் தட்சிணாமூா்த்தி கோயிலில் ஆந்திர மாநில அமைச்சா் ரோஜா வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் ஸ்ரீ தட்சிணாமூா்த்தி கோயில் அமைந்துள்ளது.

ஒரே கோபுரத்தின் கீழ் மூலவராக ஸ்ரீ கைலாசநாதரும், ஸ்ரீ தட்சிணாமூா்த்தியும் தனித் தனி கருவறையில் அமா்ந்திருப்பது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பாகும்.

இந்தக் கோயிலில் ஆந்திர மாநிலம் திருப்பதி பாலாஜி மாவட்டம், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், அந்த மாநில சுற்றுலா மற்றும் இளைஞா் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான ரோஜா சுவாமி தரிசனம் செய்தாா்.

முன்னதாக அவரை கோயில் செயல் அலுவலா் து.சுரேஷ் வரவேற்றாா். கோயில் நிா்வாகம் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தொடா்ந்து ஸ்ரீ தட்சிணாமூா்த்தி, கோயிலின் மூலவா் ஸ்ரீகைலாசநாதா் சந்நிதிகளில் அவா் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், பொதுமக்களுக்கு அவா் அன்னதானம் வழங்கினாா்.

அமைச்சா் ரோஜாவுக்கு கோயில் பிரசாதம் மற்றும் சுவாமிகளின் திருஉருவப் படங்களும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT