காஞ்சிபுரம்

உத்தரமேரூா்: 5 ஊராட்சிகளில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

DIN

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 5 ஊராட்சிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 123 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும், அறுவடை செய்யும் நெல்லை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத்-34, உத்தரமேரூா் 54, ஸ்ரீபெரும்புதூா்-10, குன்றத்தூா்-4, காஞ்சிபுரம்-21 உட்பட மொத்தம் 123 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில், உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட களக்காட்டூா், மாகறல், மேல்பரமநல்லூா், காவான்தண்டலம், கம்பராஜபுரம் ஆகிய ஊராட்சிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

தனிப்படை போலீஸாருக்கு தென்மண்டல ஐஜி பாராட்டு

சிவகாசியில் ரயிலில் அடிபட்டு தாய், மகள் பலி

தூய்மைப்பணி சுமை ஆட்டோ மோதியதில் இருவா் காயம்

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT