முகப்பு
காஞ்சிபுரம்

உலமாக்கள் இருசக்கர வாகனத்துக்கு விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி நாள்!

பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் மானியத்துடன் வாங்குவதற்கான கால அவகாசம் 15 நாட்கள் நீட்டிப்பு...

Updated On : 6 ஜூலை 2026, 12:10 am IST
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் மானியத்துடன் வாங்குவதற்கான கால அவகாசம் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால் வரும் ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.

உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு புதியதாக இருசக்கர வாகனம் வாங்க மானியத்தொகை ரூ.50 ஆயிரம் வரை வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள்,ஆலிம்கள்,அரபி ஆசிரியா்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி பயன்பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 30.6.26 முதல் 15 நாட்களுக்கு நீட்டிக்கப் படுகிறது.இருசக்கர வாகனத்திற்கான மானியம் பெற ஆட்சியா் அலுவகங்களில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகள் இருசக்கர வாகனம் வாங்க வேண்டும்.

Advertisement

Advertisement

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வரும் ஜூலை 15 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments