பள்ளிவாசல் உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்கள் அரசின் மானியத்துடன் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உலமாக்கள், பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு மானியத் தொகை ரூ.50,000- (ஐம்பதாயிரம்) வழங்க அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியா்கள், ஆசிரியைகள் உள்ளிட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலரிடம் படிவத்தைப் பெற்று விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 30-க்குள் உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்துப் பயன்பெறலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.