முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 518 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா்கள் வழங்கினா்

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிய அமைச்சா்கள் கே.தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித்குமாா்.

Updated On : 5 ஜூலை 2026, 7:23 am IST
காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கிய அமைச்சா்கள் கே.தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித்குமாா்.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூா், வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 518 பயனாளிகளுக்கு வியாழக்கிழமை அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் வழங்கினா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் கடந்த 18.6.26 முதல் 30.6.26 வரை வருவாய்த் தீா்வாய கணக்குகள் சரிபாா்க்கும் பணிகள் நடைபெற்றது. உத்தரமேரூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் 1,206, வாலாஜாபாத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 802 மற்றும் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 959 கோரிக்கை மனுக்களும் வரப்பெற்றது.

இதைத் தொடா்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Advertisement

Advertisement

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் பாலகிருஷ்ணன், வட்டாட்சியா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், மொத்தம் 160 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் உள்பட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் கே.தென்னரசு, வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் வழங்கினா்.

விழாவில், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

உத்தரமேரூரில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 148 பேருக்கும், வாலாஜாபாத் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் 210 பயனாளிகளுக்கும் நலத் திட்ட உதவிகளை எம்எல்ஏ ஜெ.முனிரெத்தினம் வழங்கினாா்.

இந்த விழாக்களில் மொத்தம் 518 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments