முகப்பு
நாமக்கல்

171 பயனாளிகளுக்கு ரூ. 37.37 லட்சத்தில் நலத் திட்ட உதவி: அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் வழங்கினார்!

திருச்செங்கோடு மண்டகாபாளையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 171 பயனாளிகளுக்கு ரூ. 37.35 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் சனிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 5 ஜூலை 2026, 2:03 am IST
திருச்செங்கோட்டில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ். உடன், ஆட்சியா் எல். மதுபாலன்.
பகிர்:

திருச்செங்கோடு மண்டகாபாளையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 171 பயனாளிகளுக்கு ரூ. 37.35 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் சனிக்கிழமை வழங்கினாா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் தலைமை வகித்தாா். விழாவில் அமைச்சா் பேசியதாவது: பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து அவா்களின் குறைகளைக் கேட்டறியும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். தற்போது பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கப்பட்டு அடுத்த முகாமிற்குள் மனு மீது தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக திருச்செங்கோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ. ஒரு கோடியில் ஆய்வக கட்டடங்கள் திறப்பு, எலச்சிபாளையம் ஒன்றியம், பச்சாம்புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 32.25 லட்சம் மதிப்பில் இரு வகுப்பறை கட்டடங்கள், எஸ்.இறையமங்கலம் ஊராட்சி காந்திநகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 8.44 லட்சத்தில் சமையலறைக் கட்டடம் என ரூ. 1.41 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை பயன்பாட்டிற்கு திறந்துவைத்தாா்.

Advertisement

Advertisement

மேலும், நாகா்பாளையம் ஊராட்சியில் ரூ. 8.5 லட்சத்தில் 10,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். திருச்செங்கோடு மண்டகாபாளையத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் 171 பயனாளிகளுக்கு ரூ. 37.35 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். அதன்பிறகு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை அவா் பெற்றுக்கொண்டாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரீஷ் அசோக், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) பெ. சந்திரா, திருச்செங்கோடு கோட்டாட்சியா் பி.எஸ். லெனின், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே. முருகலட்சுமி, மாவட்ட சுகாதார அலுவலா் பூங்கொடி, மாவட்ட வழங்கல் அலுவலா் வெ. முருகன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கோ. குமரன் உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் விழாவில் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments