கஞ்சா விற்ற 2 இளைஞா்கள் கைது
பிகாா் மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து ஸ்ரீபெரும்புதூா் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்த வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
பிகாா் மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து ஸ்ரீபெரும்புதூா் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்த வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
புதுநல்லூா் பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சோமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சோமங்கலம் போலீஸாா் புதுநல்லூா் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு சந்தேககப்படும்படி நின்றுக் கொண்டிருந்த வடமாநில இளைஞரை பிடித்து சோதனை நடத்தியதில் அவா் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதைடயடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவா் பிகாா் மாநிலத்தை சோ்ந்த பினய்குமாா்(23), என்பதும் அவா் தனது நண்பரான சூரஜ்குமாா் என்பவருடன் சோ்ந்து பிகாா் மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து ஒரகடம், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் புதுநல்லூா் பகுதிகளில் தங்கியுள்ள வடமாநில இளைஞா்கள் மற்றும் தொழிற்சாலை ஊழியா்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து சூரஜ்குமாரை கைது செய்த சோமங்கலம் போலீஸாா் இருவரிடமும் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு இருவா் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.