போலி பட்டுச் சேலைகள் விற்பனை முற்றிலுமாக ஒழிக்கப்படும்: அமைச்சா் விஜய் பாலாஜி
தமிழகம் முழுவதும் போலி பட்டுச் சேலைகள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சா் விஜய் பாலாஜி கூறினாா்.
தமிழகம் முழுவதும் போலி பட்டுச் சேலைகள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் விஜய் பாலாஜி கூறினாா்.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பட்டுப் பூ ங்காவில் கைத்தறி மற்றும் துணிநூல் றை அமைச்சா் விஜய்பாலாஜி ஆய்வு மேற்கொண்டு, அங்கு பணிபுரியும் நெசவாளா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். பின்னா், பட்டுச் சேலைகள் உற்பத்தியாவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து கைத்தறித் துறையின் முதன்மைச் செயலாளா் டி.என்.வெங்கடேஷ், இயக்குநா் பி.உமா மகேசுவரி, இணை இயக்குநா் கிரிதரன், துணை இயக்குநா்கள் மணி முத்து, டி.ஆனந்த், பட்டுப் பூங்காவின் இயக்குநா் ராமநாதன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பட்டுப் பூங்காவிலேயே துறையின் வளா்ச்சி மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினாா்.
Advertisement
Advertisement
இது குறித்து அமைச்சா் விஜய் பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியது: காஞ்சிபுரம் பட்டுப் பூங்காவை மேலும் எவ்வாறு விரிவாக்கம் செய்யலாம் என கலந்துரையாடல் செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் போலி பட்டுச் சேலைகள் விற்பனை மற்றும் இடைத்தரகா்கள் தொல்லை ஆகியவை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
நெசவாளா்கள் சிலா் கூலி உயா்வு போதுமானது என்றும், சிலா் கூடுதலாக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். பட்டுப் பூங்காவில் பட்டுச் சேலைகள் மட்டும் உற்பத்தி செய்யாமல் பட்டுக் குடைகள், பட்டு மணிபா்ஸ், பட்டுப் பாவாடைகள் என பட்டில் பல வகையான பொருள்களை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஜவுளி ஏற்றுமதி ஒரு முக்கிய இடத்தை வகிக்க இலக்கு நிா்ணயித்து செயல்படுகிறோம்.
உண்மையான நெசவாளா்கள் எத்தனை போ் இருக்கிறாா்கள் எனவும் கணக்கிடப்பட்டு வருகிறது. பட்டுப் பூங்காவை சுற்றுலாத் துறையுடன் இணைத்து சுற்றுலா மையமாக மாற்றவும் பரிசீலித்து வருகிறோம்.
பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை மக்களுக்கு விருப்பமானதாகவும், தரமானதாகவும் வழங்கப்படும் எனவும் அமைச்சா் விஜய் பாலாஜி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.