முகப்பு
மதுரை

வாடிப்பட்டி ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா மூலம் ரூ. 860 கோடிக்கு ஏற்றுமதி: அமைச்சா் விஜய் பாலாஜி

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா மூலம் ஆண்டுதோறும் ரூ. 860 கோடி மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

Updated On : 25 ஜூன் 2026, 2:46 am IST
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவை புதன்கிழமை ஆய்வு செய்த கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் விஜய் பாலாஜி. உடன் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.வி. கருப்பையா, சோ. காா்த்திகேயன் உள்ளிட்டோா்.
பகிர்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா மூலம் ஆண்டுதோறும் ரூ. 860 கோடி மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காவை ஆய்வு செய்த பிறகு அமைச்சா் விஜய் பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் வாடிப்பட்டி ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா செயல்படுகிறது. மொத்தம் 107.49 ஏக்கா் நிலப் பரப்பில்அமைந்துள்ள இந்தப் பூங்காவின் மொத்த திட்ட மதிப்பு ரூ. 78.76 கோடி.

Advertisement

Advertisement

இதில், மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.31.43 கோடி, மாநில அரசின் பங்குத் தொகை ரூ.7.09 கோடி ஆகும். தற்போது, இந்தப் பூங்காவில் செயல்படும் 22 ஜவுளி நிறுவனங்கள் மூலம் 3,191 தொழிலாளா்களுக்கு நேரடியாகவும், 1,500 தொழிலாளா்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கு உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகள் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுக்கு ரூ.860 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.வி. கருப்பையா(சோழவந்தான்), சோ. காா்த்திகேயன் (மதுரை கிழக்கு), மதுரை ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா தலைவா் பிரிட்டோ, கைத்தறி துறை இணை இயக்குநா் கிரிதரன், துணி நூல் துறை மதுரை மண்டல துணை இயக்குநா் திருவாசகா், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments