முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

காஞ்சிபுரத்தில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 9 ஜூலை 2026, 12:16 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

காஞ்சிபுரத்தில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினா் புதன்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காஞ்சிபுரம் சதாவரம் காந்தி நகா் பகுதியை சோ்ந்தவா் குணசேகரன் (25). காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவா் செல்வம் (27). இருவரும் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்கைக்கு உள்பட்ட பகுதிகளில் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளாக கண்காணிக்கப்பட்டு வந்தனா்.

கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில், இவா்கள் இருவரும் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. அரவிந்த் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

Advertisement

Advertisement

காஞ்சிபுரம் எஸ்.பி. அரவிந்தன் பரிந்துரையை ஏற்று, இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவு நகல் சிறையில் உள்ள இருவருக்கும் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments