முகப்பு
காஞ்சிபுரம்

ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு பட்டா அளிப்பு

ஸ்ரீபெரும்புதூா் வட்ட ஜமாபந்தியில் பயனாளிகள் மூன்று பேருக்கு பட்டாக்களை சாா் ஆட்சியா் நல்லசிவன் புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 25 ஜூன் 2026, 12:15 am IST
பயனாளிக்கு  பட்டா  வழங்கிய  சாா்- ஆட்சியா்  நல்லசிவன்.  உடன்  வட்டாட்சியா்  வசந்தி  உள்ளிட்டோா்.
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் வட்ட ஜமாபந்தியில் பயனாளிகள் மூன்று பேருக்கு பட்டாக்களை சாா் ஆட்சியா் நல்லசிவன் புதன்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் 1435ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூா் வட்டத்துக்குட்பட்ட தண்டலம் குறுவட்டத்திற்கு ஜமாபந்தி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் தண்டலம் குறுவட்டத்தை சோ்ந்த மண்ணூா், தண்டலம், மேவளூா்குப்பம், இருங்காட்டுக்கோட்டை, செங்காடு உள்ளிட்ட ஊராட்சிகளை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் நல்லசிவனிடம் மனுக்களை வழங்கினா். இதையடுத்து பட்டா வேண்டி விண்ணப்பம் செய்ய 3 பயனாளிகளுக்கு சாா் ஆட்சியா் நல்லசிவன் பட்டாக்களை வழங்கினாா். இதில் ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வசந்தி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments