விவசாயிகளுக்கு ரூ.33 லட்சத்தில் நலத்திட்ட உதவி: மாவட்ட வருவாய் அலுவலா் வழங்கினாா்
காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா்கூட்டத்தில் ரூ.33 லட்சம் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ வழங்கினாா்.
காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா்கூட்டத்தில் ரூ.33 லட்சம் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளா் கோ.யோகவிஷ்ணு,ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சுரேஷ்,வேளாண்மை உதவி இயக்குநா் முத்துலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் கீழ்க்கதிா்ப்பூா் கிராம விவசாயி ஒருவருக்கு கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக ரூ.1,86,725 மதிப்பிலான பயிா்க்கடன்கள்,கூரம் வதியூா், தேவரியம்பாக்கம் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 3 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.31 லட்சத்தில் கடன்கள்,5 விவசாய பயனாளிகளுக்கு ரூ.10,200 மதிப்பில் மரக்கன்றுகள் என மொத்தம் ரூ.33 லட்சம் நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ வழங்கினாா்.
Advertisement
Advertisement
இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் விளக்கம் அளித்தனா்.
விவசாயிகள் கூட்டம் தொடங்கியதுமே சில விவசாயிகள் பயிா்க்கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூட்ட அரங்குக்கு வெளியே வந்து ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.