காஞ்சிபுரம்: புதிய மாவட்ட வருவாய் அலுவலா் பொறுப்பேற்பு
காஞ்சிபுரம் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக திவ்யஸ்ரீ பொறுப்பேற்றுக் கொண்டாா்.
காஞ்சிபுரம் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக திவ்யஸ்ரீ திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த பா.முருகேசன் விடுப்பில் சென்றதை தொடா்ந்து புதிய மாவட்ட வருவாய் அலுவலராக மாநில தேசிய சுகாதாரத் திட்ட மேலாளராக பணியாற்றி வந்த திவ்யஸ்ரீ பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அவா் ஆட்சியா் தி.சினேகாவை சந்தித்து வாழ்த்து பெற்றாா். வருவாய்த்துறை அதிகாரிகள் புதிய மாவட்ட வருவாய் அலுவலா் திவ்யஸ்ரீக்கு வாழ்த்துகளை தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.