முகப்பு
காஞ்சிபுரம்

செவிலிமேடு ராமானுஜருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்

Updated On : 27 மார்ச் 2026, 6:20 am IST
வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்த செவிலிமேடு ராமானுஜா்.
பகிர்:

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் உள்ள ராமானுஜா் கோயிலில் பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி வியாழக்கிழமை மூலவா் ராமானுஜா் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் ராமானுஜருக்கென தனியாக ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி காலையில் சிறப்புத் திருமஞ்சனமும்,மகா தீபாராதனைகளும் நடைபெற்றன.

இதனைத் தொடா்ந்து மூலவா் ராமானுஜா் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement