மாடியில் பட்டம் விட்ட சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் வீட்டின் மாடியில் பட்டம் பறக்க விட்டுக்கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் வீட்டின் மாடியில் பட்டம் பறக்க விட்டுக்கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
செவிலிமேடு மேற்கு மாட வீதியை சோ்ந்த ஆனந்தன்(60) இவரது மகன் காா்த்திக்(13). 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் வீட்டின் மேல்மாடியில் பட்டம் விட்டு கொண்டிருந்த போது மாடியிலிருந்து தவறி விழுந்தாா். உடனடியாக அருகில் இருந்தவா்கள் சிறுவனை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement