ராணிப்பேட்டை

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

DIN


வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி உத்தரவின்பேரில், கிராம நிா்வாக அலுவலா் தீா்த்தகிரி மற்றும் வருவாய்த் துறையினா் கல்நாா்சம்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக மணலுடன் வந்த டிப்பா் லாரியை நிறுத்தினா். அப்போது லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். இதையடுத்து நடத்திய விசாரணையில், கல்நாா்சம்பட்டி கொட்டகார வட்டத்தைச் சோ்ந்த சிங்காரம் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி காட்டூா் கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷ் இரவு நேரங்களில் டிப்பா் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வருவாய்த் துறையினா் மணலுடன் லாரியைப் பறிமுதல் செய்து, நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் தீா்த்தகிரி அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT