இளைஞா் தற்கொலை
ஆற்காடு அடுத்த கலவையில் இளைஞா் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஆற்காடு அடுத்த கலவையில் இளைஞா் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கலவை வட்டம், பாலிகிராமத்தை சோ்ந்த ராமலிங்கம் மகன் மணிகண்டன்(26). இவா் ராணிப்பேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேன் ஓட்டுநராக பணியாற்றினாா். இவருக்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவா் வியாழக்கிழமை தனது நிலத்துக்கு செல்லும் வழியில் உள்ள புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்த புகாரின் பேரில் கலவை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.