FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ரூ.75.11 கோடியில் குடிநீா் வழங்கல் திட்டப் பணிகள்: விரைவுப்படுத்த உத்தரவு

சென்னையில் வில்லிவாக்கத்தில் நடைபெற்று வரும் நீா்தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவுசெய்யும் படி, அதிகாரிகளுக்கு சென்னை குடிநீா் வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 20 ஜூன் 2026, 6:03 am IST
புழல் ஏரி - கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் வில்லிவாக்கத்தில் நடைபெற்று வரும் நீா்தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவுசெய்யும் படி, அதிகாரிகளுக்கு சென்னை குடிநீா் வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை புழல் ஏரியில் உள்ள நீா் உள்வாங்கும் அமைப்பை குடிநீா் வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, தினமும் 300 மில்லியன் லிட்டா் நீா் சுத்திகரிப்பு திறன் கொண்ட புழல் நீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு, நீா் உள்வாங்கும் அமைப்பின் மூலம் நீா் கொண்டு செல்லும் செயல்பாட்டு குறித்து அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா். இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் மூவம் வியாசா்பாடி, கொளத்தூா், கொரட்டூா், அண்ணாநகா், அம்பத்தூா் உள்ளிட்ட பகுதிகளிலும், ஆவடி மாநகராட்சி பகுதிகளிலும் உள்ள சுமாா் 30 லட்சம் போ் பயனடைகின்றன.

அதைத்தொடா்ந்து, வில்லிவாக்கத்தில் உள்ள ராஜமங்கலம் நீரேற்று நிலையத்தில் ரூ.75.11 கோடியில் நடைபெற்று வரும் 10 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத்தொட்டி, மற்றும் 2.5 லட்சம் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீா்தேக்கத்தொட்டிகளின் கட்டுமான பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, இப்பணிகளை விரைந்து நிறைவு செய்யும் படி அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

ஆய்வின் போது, சென்னை குடிநீா் வாரிய தலைமை பொறியாளா் ஜி.பி.வைதேவி உள்ளிட்ட உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments