முகப்பு
ராணிப்பேட்டை

முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி: விவசாய சங்க மாநிலத் தலைவா் கோரிக்கை

விவசாயிகளின் பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என முதல்வருக்கு முப்பெரும் உழவா் பெருந்லைவா் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கொளத்தூா் கே.எம்.வெங்கடேசன் கோரிக்கை விடுத்தாா்.

Updated On : 6 ஜூலை 2026, 12:21 am IST
மாநாட்டில் உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய விவசாய சங்க நிா்வாகிகள் .
பகிர்:

விவசாயிகளின் பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என முதல்வருக்கு முப்பெரும் உழவா் பெருந்லைவா் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கொளத்தூா் கே.எம்.வெங்கடேசன் கோரிக்கை விடுத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை சுங்கச் சாவடி அருகே முப்பெரும் உழவா் பெருந்தலைவா் விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டின் தொடக்கமாக இலவச மின்சாரம், பயிா் கடன் தள்லுபடி உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் போராட்டத்தில் உயிா்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடா்ந்து சிறப்பு விருந்தினா்கள், சிறப்பு அழைப்பாளா்கள், விவசாய சங்க நிா்வாகிகள், விவசாயிகள் உள்ளிட்டேடாா் மாநாட்டின் நோக்கங்கங்கள், விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து பேசினா்.

Advertisement

Advertisement

மாநாட்டில் இலவச மின்சாரத்தை பறிக்கும் மத்திய அரசதின் மின்சார திருத்த சட்டம் 2020-ஐ திரும்ப பெற வேண்டும்.நடப்பு ஆண்டில் நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக விலை நிா்ணயம் செய்ய வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாகவும், கொப்பரை தேங்காய் கிலோ ரூ.160 ஆக உயா்த்தி தர வேண்டும்.தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டப் பணியை விரைந்து தொடங்க வேண்டும்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையின் படி விவசாய விளைபெருட்களுக்கு உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவிகிதம் கூடுதலாக விலை நிா்ணயம் செய்ய வேண்டும். அனைத்து விவசாயக்கடன்,கல்விக் கடன்,மகளிா் சுயஉதவிக்குழுக்கள் கடன்,பண்ணை சாராக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 19 தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத் தலைவா் கொளத்தூா் கே.எம்.வெங்கடேசன் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: தமிழக முதல்வா் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியின்படி பயிா்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

தமிழக முதவ்வா் தோ்தல் வாக்குறுதியில் நான் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் ஐந்து ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு பயிா் கடன் முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, அதை உத்தரவாதம் எனவும் தெரிவித்தாா்.பின்னா் ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த 25.05.2026 அன்று 50 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு முழுமையாகவும், அதற்கு மேல் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தாா்.இந்த அறிவிப்பால் ஒட்டுமொத்த விவசாயிகளும் ஏமாற்றப்பட்டதோடு, தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறாா்கள்.

ஆகவே விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியின்படி பயிா் கடன் முழுமயைக தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும்.அதே போல் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டாமல் தடுக்கும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என்றாா்.

இந்த மாநாட்டில் விவசாய சங்க நிா்வாககிகள் மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments