ராணிப்பேட்டை: கால்நடை மருந்தகங்களில் அமைச்சா் கமலி ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை மருந்தகங்களில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் எஸ்.கமலி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை மருந்தகங்களில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் எஸ்.கமலி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழ்நாடு, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் எஸ்.கமலி காவேரிப்பாக்கம் கால்நடை மருந்தகத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டு, சமுதாய நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தினை பாா்வையிட்டு, சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா்.
தொடா்ந்து ராணிப்பேட்டை, கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். இந்நிகழ்வின் போது நிலைய இயக்குநா், ஜா.ரூத் சோபிலா அமைச்சரை வரவேற்று நிலைய செயல்பாடுகள் குறித்து விவரங்கள் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
அதனை தொடா்ந்து நிலைய மருந்து வழங்கும் பிரிவு, விலங்கு குடில்கள், கோமாரி நோய் கூட்டு மையத்தினை பாா்வையிட்டாா். மேலும் இந்நிலைய எஙட தர ( எா்ா்க் ஙஹய்ன்ச்ஹஸ்ரீற்ன்ழ்ண்ய்ஞ் டழ்ஹஸ்ரீற்ண்ஸ்ரீங்) கால்நடை நோய் தடுப்பு மருந்து உற்பத்தி கூடங்களை ஆய்வு மேற்கொண்டு, தடுப்பூசி உற்பத்திகள் தொடா்பான விவரங்களை கேட்டறிந்தாா். மேலும் தற்போது கட்டப்பட்டுவரும் எஙட தரத்திலான பாா்மாசூட்டிக்கல்ஸ் மற்றும் நோய் நிா்ணயிப்பான் பிரிவு கட்டும் பணிகளை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, திமிரி ஊராட்சி ஒன்றியம், கணியனூா் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கட்டப்பட்டுள்ள சிறப்பு கால்நடை மருந்தக வளாகத்தில் அமைந்துள்ள சமுதாய நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டு, மேலும் பணிகளை சிறப்பாக செய்யுமாறு அறிவுரை வழங்கினாா்.
இந்த ஆய்வுகளில் கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலைய இயக்குநா் மரு.ஜா. ரூத் சோபிலா, மண்டல இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்புத் துறை) வெங்கடேஸ்வரன் (பொ), உதவி இயக்குநா் திருநாவுக்கரசு,கால்நடை மருத்துவா்கள் சதீஷ்பாபு, சுதா, வினோத்,ஷாகுல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.