FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

வழிப்பறி வழக்கில் 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி கொள்ளை வழக்கில் 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கன்னிராஜ்
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி கொள்ளை வழக்கில் 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் கடந்த 2012-ஆம் ஆண்டு கன்னிராஜ் என்பவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் 14 -ஆண்டுகளாக போலீஸாரிடம் சிக்காமல் வெளியூரில் தலைமறைவாக இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கன்னிராஜ் சென்னையில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆற்காடு ஆய்வாளா் வடிவேல் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளா் பாபு தலைமையிலான தனிப்படை குழுவினா் சென்னையில் இருந்த கன்னிராஜை கைது செய்து அழைத்து வந்து செவ்வாய்க்கிழமை ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments