ஆற்காடு மகரிஷி வித்யா மந்திா் பள்ளி ஆண்டு விழா
ஆற்காடு அடுத்த பூங்கோடு பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திா் சீனியா் செகண்டரி பள்ளியில் 5-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளியின் தாளாளா் டி.தரணிபதி தலைமை வகித்தாா். செயலாளா் ஜி.செல்வகுமாா், பொருளாளா் எஸ்.ரமேஷ் அறக்கட்டளை இயக்குநா்கள் எம்.சங்கா், எஸ்.ஆதிகேசவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் முதல்வா் பிரீத்தி ராம்குமாா் வரவேற்றாா்.
விழாவில், சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலா் கே. ராஜி கலந்து கொண்டு பேசினாா். கௌரவ விருந்தினராக சென்னை மகரிஷி குடும்பத்தின் கல்வி ஆலோசகா் விருத்தி நாராயணன் கலந்து கொண்டாா்.
Advertisement
விழாவில் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், பள்ளியின் அறக்கட்டளை தலைவா் கே.குப்புசாமி இயக்குநா்கள் மணி உமாசங்கா் மற்றும் மாணவ, மாணவிகள் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.