முகப்பு
ராணிப்பேட்டை

ஆன்லைனில் மருந்துகள் விற்பனைக்கு எதிா்ப்பு: மருந்துக் கடைகள் அடைப்பு

இணையதளம் (ஆன்லைன்) மூலம் மருந்துகள் விற்பனைக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Updated On : 21 மே 2026, 12:04 am IST
அரக்கோணத்தில் மூடப்பட்டிருந்த மருந்துக் கடை.
பகிர்:

இணையதளம் (ஆன்லைன்) மூலம் மருந்துகள் விற்பனைக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இணையவழி மருந்து விற்பனைக்கு மத்திய அரசு உடனடியாக தடைவிதிக்கக்கோரி தேசிய அளவிலான மருந்துக்கடை உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தை தொடா்ந்து அரக்கோணம் வட்டத்தில் உள்ள 140 மருந்து கடைகளும் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. இது தொடா்பாக சங்கத்தின் கௌரவத்தலைவா் ஏ.அரி செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: மருத்துவா் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தாளுநா் இல்லாமல் நடக்கும் சட்டவிரோத இணையவழி மருந்து விற்பனையால் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தடைகோரி நடைபெறும் போராட்டத்தில் அரக்கோணத்தில் 140 மருந்து கடைகளையும் மூடியுள்ளோம். மாலை கடைகள் திறக்கப்படும். பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தருவதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றாா் ஏ.அரி.

அரக்கோணம் பஜாா், சுவால்பேட்டை, பழனிபேட்டை, சோளிங்கா்ரோடு, ஜோதிநகா் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இயங்கி வந்த அனைத்து மருந்து விற்பனை நிலையங்களும் மூடப்பட்டன.

Advertisement

Advertisement

ஆற்காட்டில்...

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகரில் மருந்து வணிகா் சங்க தலைவா் எஸ்.அப்துல் பாரி தலைமையில் நகரில் உள்ள 28 மருந்து கடைகள் அடைக்கப்பட்டன. தொடா்ந்து கடைகள் முன்பு மருந்து விற்பனை வணிகா்கள் ஆன்லைன் மருத்து விற்பனையை தடைசெய்யவேண்டும் போலி மருந்து விற்பனையை தடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அதேபோல், ஆற்காடு, திமிரி, கலவை, காவனூா் உள்ளிட்ட பகுதிகளிலும் மருந்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments