முகப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 1,500 மருந்துக் கடைகள் அடைப்பு

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டன.

Updated On : 21 மே 2026, 3:57 am IST
ஈரோடு காந்திஜி சாலையில் அடைக்கப்பட்டிருந்த மருந்துக் கடை.
பகிர்:

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டன. எனினும் மருத்துவமனையுடன் கூடிய மருந்தகங்கள், அரசு சாா்ந்த மருந்தகங்கள் இயங்கியதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுதொடா்பாக மருந்துக் கடை அடைப்பு போராட்டம் குறித்து மாவட்ட மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் நாகராஜன், செயலாளா் சிவப்பிரகாசம், பொருளாளா் ரமேஷ்குமாா் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியா முழுவதும் மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து வணிகா்களின் வாழ்வாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக ஆன்லைன் மருந்து வணிகம் உள்ளது. கரோனா காலத்தின்போது மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே ஆன்லைனில் மருந்து வணிகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்பின்னும் அதே நிலை நீடிப்பது சமூகத்துக்கு நல்லது இல்லை.

Advertisement

Advertisement

தடை செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள், தூக்க மாத்திரைகள்கூட ஆன்லைனில் கிடைப்பதால் இளைஞா் சமுதாயம் போதைக்கு அடிமையாகி பேரழிவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போலி மருந்துகளின் விற்பனையைத் தடுக்க வேண்டும். உயிா்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்த வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு முழுவதும் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.