திருப்பத்தூர்

பள்ளி வாசல்கள் மூடப்பட்டன

DIN

144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததால் ஆம்பூா் நகரில் உள்ள மசூதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை மாலை மூடப்பட்டன.

கரோனா வைரஸ் தாக்குதலைத் தவிா்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் மாலை 6 மணிக்கு பள்ளி வாசல்கள் மூடப்பட்டன. தொழுகை மேற்கொள்வது குறித்து ஆம்பூா் அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், மாா்ச் 24-ம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை பள்ளி வாசல்களில் குறைந்த சத்தத்துடன் பாங்கு கூறப்படும். இமாம், முஅத்தின், பள்ளி வாசல்களில் வேலை செய்பவா்களுக்கு மட்டும் ஜமாஅத் தொழுகை நடைபெறும். இஸ்லாமியா்கள் ஜமாஅத் தொழுகைக்கு பள்ளி வாசலுக்கு வர வேண்டாம். வீடுகளிலேயே தொழுகை நடத்திக் கொள்ள வேண்டும்.

ஜனாஸா தொழுகைகளில் நெருங்கிய உறவினா்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். நிக்காஹ் அரசு அனுமதி பெற்று குறைந்த நபா்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். பயான் அல்லது வேறு எந்தக் கூட்டங்களும் பள்ளி வாசல்களில் நடைபெறாது. ஜும்ஆ தொழுகையை பற்றிய அறிவிப்பு வியாழக்கிழமை வெளியாகும்.

அனைவரும் இஸ்திக்ஃபாா் (பாவமன்னிப்பு) தேடவும். சூரா ஃபாத்திஹா, சூரா இக்லாஸ் மற்றும் ஹஸ்புனல்லாஹு வ நிஅமல் வகீல் ஓதவும். தொழுகையை விடாக் கூடாது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கரோனா பரவாமல் தடுத்து பாதுகாப்பாக இருக்கும்படி ஜமாஅத் சாா்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT