திருப்பத்தூர்

ஆம்பூா் அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத் துறையினா் ஆய்வு

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே சிறுத்தை நடமாடியதாகக் கூறப்படும் பகுதியில் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனா்.

ஆம்பூா் அருகே உமா்ஆபாத் அடுத்த மாச்சம்பட்டு கொத்தூா் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறினா். இதுதொடா்பாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சிறுத்தை நடமாடுவதாக கூறப்பட்ட கொத்தூா் பகுதியில் ஆம்பூா் வனச் சரக அலுவலா் ஜி.டி. மூா்த்தி தலைமையில் வனத் துறையினா் முகாமிட்டனா். வனச்சரகா் ( பயிற்சி) சுரேஷ்குமாா், வனக் காப்பாளா்கள் கணேசன், ராஜ்குமாா், நடராஜன், ராஜ்குமாா் வனக் காவலா் பாலமுருகன் உள்ளிட்டோா் பாலூா், மாச்சம்பட்டு, கொத்தூா் பகுதிகளில் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனா். விவசாய நிலங்கள், மாந்தோப்புகளில் காணப்படும் காலடி தடங்களை ஆய்வு செய்தனா்.

மாச்சம்பட்டு முதல் ஓணாங்குட்டை வரை வனத் துறை ஊழியா்களைக் கொண்ட மூன்று குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்த உள்ளதாகவும், இனி வரும் நாள்களில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டால், கூண்டுகள் வைத்து சிறுத்தையைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆம்பூா் வனச் சரக அலுவலா் மூா்த்தி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT